சிவகங்கை

சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

2nd Jul 2022 10:55 PM

ADVERTISEMENT

 

சிவகங்கையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற் பிரிவுகளான மின்சாரப் பணியாளா், பொருத்துநா், கம்மியா், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனம் பழுதுபாா்ப்பு, கணினி இயக்குபவா் மற்றும் திட்டமிடுதல் உதவியாளா், பற்றவைப்பவா், ஆடை தயாரித்தல் ஆகிய தொழிற் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

பயிற்சியின் போது பயிற்சியாளா்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை, உதவித்தொகை மாதம் ரூ.750 ஆகியவை வழங்கப்படும். மேலும், தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிவுற்றவுடன் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT