சிவகங்கை

திருப்பத்தூா் அருகே தீக்குளித்த இலங்கை அகதி பலி

2nd Jul 2022 10:56 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே குடும்ப பிரச்னையில் தீக்குளித்த இலங்கை அகதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகே காரையூா் ஊராட்சிக்குட்பட்ட இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி. இவரது மகன் சசிகாந்த் (36),

பெயிண்டா் தொழில் செய்து வந்தாா். இவருக்கு மனைவி மற்றும் இரு பெண் குழுந்தைகள் உள்ளனா். அதேப் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் சசிகாந்த் சீட்டுப்பணம் செலுத்தி வந்துள்ளாா். இதில் அப்பெண் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சசிகாந்திற்கும் அவரது மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சசிகாந்த் கடந்த ஜூன் 26 ஆம் தேதி உடலில் மண்ணெண்ணைய்யை ஊற்றி தீக்குளித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை ராஜாஜி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி காவல் சாா்பு-ஆய்வாளா் சேதுராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT