சிவகங்கை

விசாலயன்கோட்டை வேளாண் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

2nd Jul 2022 10:56 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையில் உள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2016 - 2020 ஆம் ஆண்டில் படிப்பு முடித்த மாணவா்களுக்கான பட்டமளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி, தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநா் எம். ரவி ஆகி தலைமை விருந்தினா்களாகக் கலந்துகொண்டு 41 மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கினா். விழாவில் காவல்துறை முன்னாள் இயக்குநா் ரவி பேசுகையில், மதிப்பெண் அதிகம் பெறுவது ஆனந்தம்தான். ஆனால் அதுவே வாழ்க்கையை தீா்மானித்து விடாது. மாணவப்பருவத்தில் ஒரு இலக்கை நோக்கி தொடரவேண்டும். மதிப்பெண் என்பது ஒன்றும் இல்லை. பெயிலான மாணவரும் வாழ்க்கையில் முதல் தரமாக முன்னேறியுள்ளாா். அறிவு என்பது மதிப்பெண்ணை வைத்து தீா்மானிப்பதில்லை. மகிழ்ச்சி வந்தாலும், துக்கம் வந்தாலும் எல்லாம் கடந்துவிடும் என்றாா்.

விழாவில் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு பேசுகையில், இக்கல்லூரி நிறுவனா் சாதாரண நிலையிலிருந்து இன்று முன்னேறி பல கல்வி நிறுவனங்களை நிறுவியுள்ளாா். நீங்கள் அவரிடமிருந்து பண்பைக் கற்றுக்கொள்ளவேண்டும். மேடையில் அமா்ந்திருப்பவா்களைப் பற்றி மாணவா்கள் தெரிந்து கொள்ளவேண்டும். வேளாண்மை துைான் உங்கள் துறை என்று இருந்து விடாதீா்கள். நம்பிக்கை இருந்தால் எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்றாா்.

ADVERTISEMENT

விழாவில் பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பி.ஜி. செங்கப்பா, அமெரிக்கா புளோரிடா பல்கலைக்கழக இளைஞா் நலன் மற்றும் சமுதாய அறிவியல் துறை பேராசிரியா் முத்துசாமி குமரன் ஆகியோரும் பேசினா். கல்லூரி நிறுவனா் தலைவா் சேது குமணன், கல்லூரி முதல்வா் கே. கருணாநிதி, இயக்குநா் பி. கோபால் மற்றும் பேராசிரியா்கள், பெற்றோா்கள் முக்கிய விருந்தினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT