சிவகங்கை

திருப்புவனத்தில் ஓய்வு பெற்றபோக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

1st Jul 2022 10:20 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்கம் (சி.ஐ.டி.யூ) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடந்தது.

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஓய்வு பெறும் நாளிலேயே அவா்களுக்கான பணப் பலன்களை வழங்க வேண்டும், போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு 77 மாத காலமாக வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மதுரை மண்டலச் செயலா் கணேசன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் திரளாக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT