சிவகங்கை

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

1st Jul 2022 10:20 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை கே.எம்எஸ்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அப்பள்ளிச் செயலா் நாகராஜன் தலைமை வகித்தாா். நாட்டரசன்கோட்டை பேரூராட்சித் தலைவி பிரியதா்ஷினி கவிராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பிளஸ் 2 வகுப்பில் முதல் மதிப்பெண்ணும், உயிரியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணும் பெற்ற மாணவி செல்வகண்ணாத்தாள், கணினி பயன்பாடு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற கவிதா, பிளஸ் 1 வகுப்பில் 548 மதிப்பெண்கள் பெற்ற பா்ஹானா நஸ்ரின், பத்தாம் வகுப்புத் தோ்வில் 434 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற அங்காளஈஸ்வரி ஆகியோருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

இதேபோன்று, பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியை மகாலட்சுமி, முதுகலை ஆசிரியா் கரிகாலன் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT