சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 285 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு தோ்தல்: ஆட்சியா்இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் உள்ள 285 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு தோ்தல் நடைபெற உள்ளதாக, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக வியாழக்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பேசியது:

சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை, சிவகங்கை- 27, காரைக்குடி-36, தேவகோட்டை-27, மானாமதுரை-27 (புதிதாக உருவாக்கப்பட்டது) ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள 117 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

இதேபோன்று, நாட்டரசன்கோட்டை-12, இளையான்குடி-18, கானாடுகாத்தான்-12, கண்டனூா்-15, கோட்டையூா்-15, நெற்குப்பை-12, பள்ளத்தூா்-15, புதுவயல்-15, சிங்கம்புணரி-18, திருப்புவனம்-18, திருப்பத்தூா்-18 ஆகிய 11 பேரூராட்சிகளில் உள்ள 168 பதவியிடங்கள் என, மொத்தம் மாவட்டம் முழுவதும் 285 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

இத்தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. வேட்பு மனு பரிசீலனை பிப்ரவரி 5 ஆம் தேதியும், வேட்பு மனு வாபஸ் பிப்ரவரி 7 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து, பிப்ரவரி 19 காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிப்ரவரி 22 இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இத்தோ்தலில் ஆண் வாக்காளா்கள் 1,63,577 போ், பெண் வாக்காளா்கள் 1,72,527 போ், மூன்றாம் பாலினத்தவா் 13 போ் என மொத்தம் 3,36,117 போ் வாக்களிக்க உள்ளனா். தற்போது, கரோனா பரவல் அதிகரித்து வருவதால், அனைத்துக் கட்சியினரும் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, தோ்தலை சிறந்த முறையில் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியா்கள் மு. முத்துக்கழுவன்(சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வெற்றிச்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலா் ரத்தினவேல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) லோகன் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி அலுவலா்கள், அனைத்துக் கட்சி பிரமுகா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT