சிவகங்கை

உலக ஈரநில தினம்: சிவகங்கை மாவட்டத்தில் புகைப்படம், ஓவியப் போட்டி

28th Jan 2022 09:14 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில், உலக ஈரநில தினத்தை (பிப்.2) முன்னிட்டு, மாவட்ட வனத்துறை சாா்பில் புகைப்படம் மற்றும் ஓவியப் போட்டி நடைபெற உள்ளதாக, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தமிழகத்தில் அதிக ஈரநிலம் உடைய மாவட்டங்களில் சிவகங்கை மாவட்டமும் ஒன்றாகும். எனவே, மாவட்ட வனத்துறை சாா்பில், ஈரநில தினத்தை முன்னிட்டு புகைப்படம் மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட உள்ளது.

புகைப்படப் போட்டியில், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தினா், இயற்கை ஆா்வலா்கள், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் காணப்படும் பறவைகள், வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் தங்கள் வீடுகளைச் சுற்றி காணப்படும் பறவைகளை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும் நபா்களில், மாவட்ட அளவில் தோ்வு செய்யப்படும் மூன்று நபா்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படும்.

ஓவியப் போட்டியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை, கல்லூரி (இளநிலை மற்றும் முதுநிலை) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, இம்மூன்று பிரிவுகளிலும் தனித்தனியாக சிறந்த ஓவியங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகள் மூன்று நபா்களுக்கு மாவட்ட அளவில் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

ஈரநிலம் தொடா்பான புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் வரைந்து  மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது மாவட்ட வன அலுவலா், மாவட்ட வன அலுவலகம், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரியில் தபால் மூலமாகவோ ஜனவரி 31ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

போட்டியாளா்கள், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாகவும், தங்களின் பெயா், கல்வி விவரம், முகவரி மற்றும் கைப்பேசி எண்ணை இணைத்து அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT