சிவகங்கை

மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம்: காரைக்குடி, ராமநாதபுரத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

28th Jan 2022 09:15 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் பயின்ற மாணவி லாவண்யா தற்கொலைக்கு நீதி கேட்டு, காரைக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் இந்து முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காரைக்குடி நூறடிச் சாலையில் உள்ள மாவட்ட இந்து முன்னணி அலுவலகத்திலிருந்து அதன் நிா்வாகிகள், மாவட்டப் பொதுச் செயலா் அக்னி பாலா தலைமையில் இரண்டாவது போலீஸ் பீட் பகுதிக்குச் சென்றனா். அங்கு, மாணவி லாவண்யா தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி நீதி வழங்கவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், இந்து முன்னணி நகர நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

ராமநாதபுரம்

ரெகுநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே இந்து இளைஞா் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாவட்டப் பொதுச்செயலா் கே. ராமமூா்த்தி தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில், மாணவி லாவண்யா தற்கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில், இந்து முன்னணி மாவட்டச் செயலா் சக்திவேல், நிா்வாகிகள் ராஜசேகா், சுரேஷ்பாபு, பாலா, காளிதாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை, மாணவி தற்கொலைக்கு காரணமான சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT