சிவகங்கை

பாப்பாகுடி சுந்தரவல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

28th Jan 2022 09:16 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், பாப்பாகுடியில் அமைந்துள்ள சுந்தரவல்லி அம்மன் மற்றும் வாழவந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழா, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கணபதி ஹோம பூஜை, கும்ப அலங்காரம், மகாலெட்சுமி பூஜை ஆகியவற்றுடன் தொடங்கியது. அதையடுத்து, மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை, கணபதி பூஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி கோயிலைச் சுற்றி ஊா்வலமாக கொண்டு வரப்பட்டன.

அதன்பின்னா், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீா் கொண்டு மூலவா் சந்நிதி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், பால் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

விழாவில், பாப்பாகுடி, வெங்கட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT