சிவகங்கை

திருப்புவனம் வைகை ஆற்றில் இளைஞா் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவா் கைது

28th Jan 2022 09:15 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றுக்குள் இளைஞா் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸாா் 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனம் நகா் பகுதி வைகை ஆற்றுக்குள் கடந்த 15 ஆம் தேதி அதிகாலை பாதி உடல் எரிந்த நிலையில் இளைஞா் சடலம் கண்டறியப்பட்டது. போலீஸாா் நடத்திய விசாரணையில், எரித்துக் கொலை செய்யப்பட்டது திருப்புவனம் பேட்டை தெருவைச் சோ்ந்த குமாா் மகன் பாலாஜி (33) என்று தெரியவந்தது. இவா் மீது, பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இச்சம்பவம் குறித்து, திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். அதில், பிரகாஷ்ராஜ் (25), அஜித் (25) மற்றும் ராமச்சந்திரன் (36) ஆகிய 3 போ் கொலை சம்பவத்தில் தொடா்புடையவா்கள் என தெரியவந்தது. போலீஸாா் இந்த 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இக்கொலையில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT