சிவகங்கை

அமராவதிபுதூா் பகுதியில் நாளை மின்தடை

28th Jan 2022 09:14 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜன. 29) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஆறாவயல், தானாவயல், வேட்டைக்காரன் பட்டி, அரியக்குடி, விசாலயன்கோட்டை, எஸ்.ஆா். பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, காரைக்குடி மின்கோட்டச் செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT