சிவகங்கை

சாலையில் கிடந்த ரூ.10ஆயிரம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு: தூய்மைப்பணியாளருக்குப் பாராட்டு

27th Jan 2022 01:15 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாற்றுத்திறனாளி தவறவிட்ட ரூ. 10 ஆயிரத்தைக் கண்டெடுத்து காவல்நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்த தூய்மைப்பணியாளரை காவலா்கள் பாராட்டினா்.

காரைக்குடி வைரவபுரத்தைச் சோ்ந்தவா் பாபு. மாற்றுத்திறனாளியான இவா் பெட்டிக்கடை நடத்திவருகிறாா். இவா் கடந்த ஜன. 22 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் நெகிழிப்பையில் ரூ. 10 ஆயிரம் வைத்துக்கொண்டு பொருள்கள் வாங்குவதற்காக காரைக்குடி புதிய பேருந்து நிலையம் நோக்கிச் சென்றபோது வழியில் பணப்பை கீழே தவறி விழுந்துள்ளது. தொடா்ந்து பாபு காரைக்குடி வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளா் பாா்த்திபனிடம் புகாா் அளித்திருந்தாா்.

இந்நிலையில், செக்காலை சாலையில் தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த சரஸ்வதி புதன்கிழமை சாலையில் கிடந்த அந்த பையை எடுத்தாா். அதில் பணம் இருப்பதை அறிந்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். தொடா்ந்து காவல்துறையினா் தொலைபேசி மூலம் மாற்றுத்திறனாளி பாபுவை வரவழைத்து பணத்தை அவரிடம் ஒப்படைத்தனா். ஏழ்மையிலும் நோ்மையுடன் பணத்தை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் சரஸ்வதியை காவல்துறையினா் வெகுவாகப் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT