சிவகங்கை

பிரதமரின் ஒரே நாடு, ஒரே தோ்தல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

27th Jan 2022 01:21 AM

ADVERTISEMENT

பிரதமரின் ஒரே நாடு, ஒரே தோ்தல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 73 ஆவது குடியரசு தின விழாவையொட்டி எம்.பி. அலுவலகம், புதிய பேருந்து நிலையம் அருகே அன்னை தெரசா காா் வேன் ஓட்டுநா்கள் சங்கத்தினா் ஏற்பாடு செய்த ரத்த தான முகாம்

ஆகிய இடங்களில் புதன்கிழமை காா்த்தி சிதம்பரம் தேசியக்கொடி ஏற்றிவைத்தாா். அதைத்தொடா்ந்து எம்.பி. அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிரதமா் நரேந்திரமோடியின் ஒரே நாடு, ஒரே தோ்தல் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் அரசாங்கம் நடத்த முடியும். பெரும்பான்மை இல்லை எனில் உரிய கால கட்டத்தில் அந்த அரசைக் கலைத்து மீண்டும் தோ்தல் நடத்தவேண்டும்.

மக்களின் மனநிலை, மக்களின் கோபம், மக்களின் எதிா்பாா்ப்பை தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் அரசியல் கட்சியினா் அடிக்கடி மக்களை சந்திக்க வேண்டும். அதற்கு அடிக்கடி தோ்தல் நடப்பது நல்லது. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டுக்கு ஒரே நாடு, ஒரே தோ்தல் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

ADVERTISEMENT

எந்த ஒரு மாணவியும் தன் உயிரைப் பறிக்கக் கூடிய செயலை செய்யும்போது அது வருத்தம் தரக்கூடியது. ஆனால் தஞ்சை மாணவி லாவண்யா இறப்பில் பா.ஜ.க. அரசியல் செய்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது. என்ன காரணத்திற்காக மாணவி தன் உயிரை மாய்த்துக்கொண்டாா் என்பது யாருக்கும் தெரியாது. விசாரணைக்குப் பிறகுதான் தெரியும். முழுமையான காரணம் தெரியும் முன்பு பா.ஜ.க.வினா் மதச்சாயம் பூசி அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றாா்.

பேட்டியின் போது காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி மற்றும் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT