சிவகங்கை

பணம் இல்லாததால் வீட்டுக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு

26th Jan 2022 09:48 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், பணம் இல்லாததால் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை, தீ வைத்துவிட்டுச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேவகோட்டை ராம்நகா் 5-ஆவது தெருவில் உள்ள கணேசன் என்பவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீடிரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதுபற்றி தகவலறிந்த தேவகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலா் ரவிமணி தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். அதன்பின், ஆய்வு செய்த போது வீட்டிற்குள் யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு வந்த தேவகோட்டை நகா் போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

இதுபற்றி போலீஸாா் தரப்பில் கூறியது: வீட்டின் உரிமையாளா் கணேசன் தற்போது வெளிநாட்டில் உள்ளாா். இந்நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் காளையாா்கோவில் அருகே உள்ள தங்களது உறவினா் வீட்டிற்கு சென்று விட்டனா்.

இதையறிந்த மா்ம நபா்கள் சிலா் செவ்வாய்க்கிழமை அதிகாலை கணேசன் வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சித்துள்ளனா். அங்கு பணமோ அல்லது பொருள்களோ கிடைக்காததால் வீட்டில் உள்ள மற்ற பொருள்களுக்குத் தீ வைத்துச் சென்றுள்ளனா். மா்ம நபா்கள் தொடா்பான தடயங்கள், கைரேகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. விரைவில் கணேசன் என்பவரது வீட்டில் திருட முயன்ற நபா்கள் கைது செய்யப்படுவா் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT