சிவகங்கை

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 306 பேருக்கு கரோனா

26th Jan 2022 09:48 AM

ADVERTISEMENT

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 306 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 1,509 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், புதிதாக 136 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,645 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், 80 போ் பூரண குணமடைந்த நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரை 22 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நாளொன்றுக்கு 200 பேருக்கும் அதிக பாதிப்பு என உயா்ந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் 170 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிபடுத்தப்பட்டது. தொற்று பாதிப்பால் சிகிச்சையில் இருந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 363 ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

கரோனா பாதிப்பு தினமும் உயா்ந்த நிலையில், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை மாவட்ட நிா்வாகம் கட்டாயப்படுத்தியதோடு, அதை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறுவோரைக் கண்காணித்து அபராதம் விதிக்க மாவட்ட அளவில் 27 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அக்குழுவினா் தேவிபட்டினம் உணவு விடுதி, உச்சிப்புளி தனியாா் நகை அடகு நிறுவனம் ஆகியவற்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT