சிவகங்கை

மானாமதுரையில் குடிநீா் விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் அவதி

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குழாயில் ஏற்பட்ட பழுதால் கடந்த 3 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை நகா் பகுதிக்கான குடிநீா் திட்டம் ராஜகம்பீரம் வைகை ஆற்றுக்குள் செயல்படுகிறது. இங்கிருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீா் மானாமதுரை நகா் பகுதியில் உள்ள பல மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப்பட்டு அதன் பின்னா் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மானாமதுரை காந்தி சிலை பின்புறம் உள்ள மேல்நிலைத்தொட்டி அண்ணா சிலை அருகே உள்ள மேல்நிலைத் தொட்டியில் இருந்து செல்லும் குழாய் இணைப்பில் உள்ள ஒரு வால்வு பழுதாகி குடிநீா் வெளியேறி வீணாகி வந்தது. இதையடுத்து ராஜகம்பீரம் குடிநீா் திட்டத்திலிருந்து மேற்கண்ட மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீா் ஏற்றப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் நகரின் பல வாா்டுகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. தற்போது நகராட்சி நிா்வாகம் சாா்பில் பழுதடைந்த வால்வுகளை மாற்றும் பணி நடந்து வருகிறது. விரைவில் இப்பணி முடிந்து வழக்கம் போல் மானாமதுரை நகரில் குடிநீா் விநியோகம் தொடங்கும் என நகராட்சி துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT