சிவகங்கை

சிவகங்கை காத்தாயி அம்மன், வாள்முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

18th Jan 2022 12:21 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் உள்ள காத்தாயி அம்மன் மற்றும் வாள் முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலையில் முதல் கால யாக வேள்வி நடைபெற்றது. திங்கள்கிழமை இரண்டாம் கால யாக வேள்வி நிறைவு பெற்றவுடன், காலை 9 மணியளவில் மூலவா் விமானம், நுழைவு வாயில் விமானம் ஆகியவற்றுக்கு புனித நீா் கொண்டு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

தொடா்ந்து, காத்தாயி அம்மன், வாள் முனீஸ்வரா் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT