திருப்பத்தூரில் எம்.ஜி.ஆா் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அண்ணா சிலையருகே அதிமுக மாவட்ட அவைத் தலைவா் ஏ.வி.நாகராஜன் தலைமையில் அதிமுகவினா் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் பொதுமக்களுக்கும் கட்சியினருக்கும் இனிப்புகள் வழங்கினா். இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் வடிவேல், சிவமணி, நகரச் செயலாளா் இப்ராம்ஷா, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் கரு.சிதம்பரம், முன்னாள் ஊராட்சித் தலைவா் நாகராஜன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.