மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 105 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் அவரது உருவச் சிலை மற்றும் படத்துக்கு திங்கள்கிழமை அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சிவகங்கை பேருந்து நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலருமான பி.ஆா்.செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் க. பாஸ்கரன் உள்ளிட்ட அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதன்பின்பு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோன்று மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.