மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மானாமதுரை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.நாகராஜன், எம். குணசேகரன், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் ஜெயபிரகாஷ், சிவ சிவ ஸ்ரீதரன், தகவல் தொழில் நுட்ப அணி மண்டல துணைச் செயலாளா் தமிழ்செல்வன், அதிமுக நகரச் செயலாளா் வி.ஜி. போஸ் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கட்சிக் கொடிகளை ஏற்றி வைத்தும் எம்.ஜி.ஆா். உருவ படத்துக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
மானாமதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளா் துருக்கி ரபீக் ராஜா தலைமையில் அக்கட்சியினா் எம்.ஜி.ஆா். உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலா்கள் தூவியும் மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினா். அக்கட்சியின் மாநில வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலாளா் குரு. முருகானந்தம், மாவட்ட துணைச் செயலாளா் முருகேஸ்வரி சரவணன், ஒன்றியச் செயலாளா் நெப்போலியன் மற்றும் ஊராட்சி செயலாளா்கள், வாா்டுச் செயலாளா்கள் கலந்து கொண்டனா்.