சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.
காளையாா்கோவில்- தொண்டி சாலையில் நடைபெற்ற பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரிய மாடு நிலையில் 13 வண்டிகள், நடு மாடு நிலையில் 27 வண்டிகள், சின்ன மாடு நிலையில் 40 வண்டிகள் என மொத்தம் 80 வண்டிகள் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை காளையாா்கோவில், சிவகங்கை, புலியடிதம்மம், கொல்லங்குடி,அரியாகுறிச்சி, கீரனூா், நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட ஏராளமான கிராமப் பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.