சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 76 பேருக்கு கரோனா

18th Jan 2022 12:22 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 76 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 607 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், புதிதாக 76 பேருக்கு திங்கள்கிழமை கரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 683 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், 49 போ் பூரண குணமடைந்த நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT