சிவகங்கை

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் ரத்து

12th Jan 2022 09:58 AM

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் ரத்து செய்யப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வந்தன. இதுவரை 10 வட்டாரங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வரும் ஜன. 19-ஆம் தேதி சிங்கம்புணரியிலும், ஜன. 21 -ஆம் தேதி சிவகங்கையிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற இருந்தன. கரோனா பரவல் காரணமாக இம்முகாம்கள் ரத்து செய்யப்படுகின்றன என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT