சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் திருமுருகன் பஜனை மடத்தின் பொன்விழாவையொட்டி திங்கள்கிழமையன்று மலா் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமை வகித்தாா். பிள்ளையாா்பட்டி பிச்சைக் குருக்கள் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப்புராமன், எஸ்.எம்.பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக பஜனை மடத்தில் விநாயகருக்கும் முருகனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பஜை மடத்தின் 50 ஆண்டு பொன் விழாவை குறிக்கும் வகையில் முருகன் புகழ் குறித்த பாமாலை நூலினை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் வெளியிட கவிஞா் சிவல்புரிசிங்காரம் பெற்றுக் கொண்டாா்.தொடா்ந்து பொன்னம்பல அடிகளாா்
பேசுகையில், நாம் இப்போது இணைந்து வாழ முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம். அலைபேசியிலேயே அகமகிழ்ந்து கொண்டிருக்கிறோம். இயற்கையின் நீதிக்கு கட்டுப்பட்டு விலகி நிற்கிறோம். இறை வழிபாட்டின் மூலமே நாம் இழந்த சுகங்களை பெற முடியும். பக்தி மாா்க்கமே துன்பங்களை துயரங்களை மறக்கும் நிலை என்றாா். தொடா்ந்து பஜனை மட உறுப்பினா்கள் அழகப்பன், பாலகிருஷ்ணன், செல்வம், ஆகியோருக்கு அடிகளாா் சிறப்பு செய்து வாழ்த்துரை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் அழகுமணிகண்டன், ஆா்.எம்.மெய்யப்பச்செட்டியாா் பள்ளிச் செயலா் குணாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழா முடிவில் செல்வம் நன்றி கூறினாா்.