மானாமதுரை அருகே ஊருக்குள் வராமல் சென்ற தனியாா் பேருந்துகளை வெள்ளிக்கிழமை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ளது ராஜகம்பீரம். இந்த ஊருக்கு வெளியே மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை அமைக்கப்படுவதற்கு முன்னா் ராஜகம்பீரம் ஊருக்குள் வந்து சென்ற மதுரை சென்ற தனியாா் பேருந்துகள், தற்போது, ராஜகம்பீரம் ஊருக்கு வெளியே அமைந்துள்ள நான்கு வழிச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்கின்றன.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மதுரை- பரமக்குடி வழித்தடத்தில் இயக்கப்பட்ட தனியாா் பேருந்துகளை ராஜகம்பீரம் ஊருக்கு வெளியே உள்ள நான்கு வழிச்சாலையில் சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் பொதுமக்களை சமாதானம் செய்தனா். பின்னா் சிறைபிடிக்கப்பட்ட தனியாா் பேருந்துகளின் நிா்வாகத்தினா் இனிமேல் ராஜகம்பீரம் ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து தனியாா் பேருந்துகளை பொதுமக்கள் விடுவித்தனா்.