சிவகங்கை

மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு

1st Jan 2022 09:04 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி மூலவா் சோமநாதா் சுவாமிக்கு அபிஷேக பொருள்களால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் நந்திதேவருக்கும் அபிஷேகங்கள் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து சுவாமிக்கும், நந்தி தேவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

சிவனடியாா்கள் கயிலாய வாத்தியங்கள் இசைக்க பிரதோஷ மூா்த்தி வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடாகி கோயில் உள்பிரகாரத்தில் பவனி வந்தாா். பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று சோமநாதா் சுவாமியையும் நந்தி தேவரையும் தரிசனம் செய்தனா்.

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயில், திருப்பாச்சேத்தி சிவன் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT