சிவகங்கை

‘பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்’

1st Jan 2022 10:28 PM

ADVERTISEMENT

பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப்-2) நேரடி நியமன அலுவலா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் வே.தா்மராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு ஜனவரி மாதம் முதல் 31 சதவீதமாக அகவிலைப்படியை உயா்த்தி வழங்கியும்,

சி மற்றும் டி பிரிவு அலுவலா்கள், ஒய்வூதியதாரா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கவும் உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் சங்கத்தின் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு அலுவலா்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பினை சரண்டா் செய்து பணப்பலன்கள் வழங்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலா்களுக்கு முன்களப்பணியாளா் என்ற முறையில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அறிவித்தது போல், அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT