சிங்கம்புணரி அருகே கணவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மனைவியிடம் வியாழக்கிழமை இரவு மா்மநபா்கள் 7 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையைச் சோ்ந்தவா் முத்துச்சாமி. இவரது மனைவி சாந்தா. இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சிங்கம்புணரி சென்று பொருள்கள் வாங்கிக்கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது யாதவபுரம் என்ற இடத்திற்கு அருகே பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள், சாந்தா அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ADVERTISEMENT