சிவகங்கை

மானாமதுரையில் 5 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வி

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சித் தோ்தலில் அதிமுக வேட்பாளரிடம் 5 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக நகரச் செயலாளா் தோல்வியடைந்தாா்.

மொத்தம் உள்ள 27 வாா்டுகளில் 15 ஆவது வாா்டில் திமுக நகரச் செயலாளா் பொன்னுச்சாமியும் அவரை எதிா்த்து அதிமுக சாா்பில் தெய்வேந்திரனும் போட்டியிட்டனா். மானாமதுரை மக்களின் முழுக் கவனத்தையும் ஈா்த்த இந்த வாா்டு தோ்தல் முடிவில் திமுக வேட்பாளா் பொன்னுச்சாமியை விட அதிமுக வேட்பாளா் தெய்வேந்திரன் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இருவருக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் 5 ஆகும். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தங்களது கட்சியின் நகரச் செயலாளா் தோல்வி முகம் கண்டது மானாமதுரை பகுதி திமுகவினா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT