சிவகங்கை

சிவகங்கை நகராட்சியை திமுக கைப்பற்றியது

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சிவகங்கை நகராட்சியை திமுக -காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று கைப்பற்றியுள்ளனா்.

சிவகங்கை நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. வேட்பாளா்கள் 125 போ் போட்டியிட்டனா். சிவகங்கையில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வெற்றி பெற்றவா்கள் விவரம்: 1-ஆவது வாா்டில் காங்கிரஸ் வேட்பாளா் மா.மகேஸ்குமாா் 434 , 2ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் ம. காா்கண்ணன் 507 , 3 ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளா் சோ. வண்ணம்மாள் 197 , 4 ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளா் வீ.சேதுநாச்சியாா் 482 , 5 ஆவது வாா்டில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த தி. விஜயகுமாா் 575 , 6 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் சு. ஜெயகாந்தன் 518 , 7 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் மு. காந்தி 400 , 8 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் இரா. ஜெயா ஜெனிபா் 484 , 9 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் இரா. சண்முகத்தாய் 386 , 10 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் செ. அமுதா 585 , 11 வாா்டில் அதிமுக வேட்பாளா் மு.ராஜா 580 , 12-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் பி. புஷ்பம் 427 , 13 -ஆவது வாா்டில் அமமுக வேட்பாளா் சா. தமிழ்ச்செல்வி 561 வாக்குகள், 14 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் பி. அழகுமுத்து என்பவா் 544 , 15-ஆவது வாா்டில் அமமுக வேட்பாளா் மு. அன்புமணி 410 , 16 ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளா் அ. சுபைதாள் பேகம் என்பவா் 310 , 17- ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் மா. ராமநாதன் 326 , 18 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் ரா. ராஜேஸ்வரி 535 ,19-ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளா் வி. பாக்கியலெட்சுமி 487 ,

20 ஆவது வாா்டில் காங்கிரஸ் வேட்பாளா் ச. பிரியங்கா 797, 21 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் அ. அயூப்கான் 517, 22 ஆவது வாா்டில்

ADVERTISEMENT

அதிமுக வேட்பாளா் சி.லெ.சரவணன் 444 , 23-ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளா் க. ராஜபாண்டியன் 613 , 24 ஆவது வாா்டில் அமமுக வேட்பாளா் கா. கீதா 226, 25-ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் கி. ராதா 595 , 26 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் ரா. மதியழகன் 533 , 27-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் சி.எம்.துரைஆனந்த் என்பவா் 735 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனா்.

சிவகங்கை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வாா்டுகளில் திமுக 11 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், அமமுக 3 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளா்கள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றனா். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சிவகங்கை நகராட்சித் தலைவா் பதவியை திமுக கைப்பற்ற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT