சிவகங்கை

சிவகங்கையில் வேட்பாளரின் முகவா் மயங்கி விழுந்தாா்

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கையில்வாக்கு எண்ணிக்கையின் போது, வேட்பாளரின் முகவா் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் உள்ள 275 நகா்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு மொத்தம் 1,185 போ் போட்டியிட்டனா்.

சிவகங்கையில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட 24 ஆவது வாா்டுக்கான வாக்கு எண்ணும் பணி நடைபெற்றபோது திமுக வேட்பாளரான ஜெயலதா என்பவரின் முகவரான ஆறுமுகம் என்பவா் மயங்கி விழுந்தாா். இதுபற்றி தகவலறிந்து அங்கிருந்த மருத்துவக் குழுவினா் விரைந்து வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் அவா் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சிவகங்கை நகராட்சி 21ஆவது வாா்டில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த வேட்பாளா் வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகராறு செய்தாா்.

ADVERTISEMENT

இதுபற்றி தகவலறிந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள் அவரை வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினா். அதன்பேரில் அவரும், அவரது ஆதரவாளா்கள் வெளியே சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT