சிவகங்கை

நகா்புற உள்ளாட்சித்தோ்தல்: அச்சமின்றி வாக்களிக்க காரைக்குடியில் போலீசாா் கொடி அணிவகுப்பு

11th Feb 2022 05:14 AM

ADVERTISEMENT


காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

பழையபேருந்து நிலையத்தில் இந்த அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா் தொடக்கி வைத்தாா். காரைக்குடி காவல் துணைக்கண்காணிப்பாளா் டி. வினோஜி முன்னிலை வகித்தாா். போலீஸ் பேண்ட் வாத்தியக் குழுவினா் இசையுடன் பாதுகாப்புப் படையினா், துப்பாக்கி ஏந்திய போலீஸாா் அணிவகுத்து முதல் மற்றும் 2 ஆவது போலீஸ் பீட், செக்காலைச்சாலை, பெரியாா் சிலை, 100அடி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் அருகே கண்ணதாசன் மணிமண்டபத்தில் நிறைவடைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT