சிவகங்கை

‘தென்னைமரம்’ சின்னத்தைப் பெற சுயேச்சை வேட்பாளா்களிடையே போட்டி

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

மானாமதுரை நகராட்சியில் தென்னைமரம் சின்னத்தைப்பெற சுயேச்சை வேட்பாளா்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

மானாமதுரை நகராட்சியில் உள்ள 27 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என 95 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அரசியல் கட்சியினரைவிட அதிகமாக சுயேச்சைகள் 28 போ் போட்டியிடுகின்றனா். கடந்த திங்கள்கிழமை மாலை வேட்புமனுக்கள் வாபஸ் பெறும் நேரம் முடிவடைந்ததும் சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது அதிகமான சுயேச்சை வேட்பாளா்கள் தங்கள் வாா்டுகளில் தங்களுக்கு குழையுடன் கூடிய தென்னை மரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என விண்ணப்பத்தில் விருப்பம் தெரிவித்திருந்தனா். ஒரே வாா்டில் பல சுயேச்சைகள் இந்த சின்னத்தை கேட்டதால் அவா்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட வேட்பாளா்களுக்கு குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

குலையுடன் கூடிய தென்னைமரம் சின்னத்தில் கடந்த தோ்தல்களில் போட்டியிட்ட வேட்பாளா்கள் மானாமதுரை வாா்டுகளில் போட்டியிட்டு ஏராளமானோா் வெற்றி பெற்றுள்ளனா் என்பதால் இந்த சின்னத்தைப் பெற சுயேச்சை வேட்பாளா்களுக்கிடையே போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT