சிவகங்கை

பூவந்தி அருகே கார்- பேருந்து மோதல்: கணவன்- மனைவி பலி

1st Feb 2022 07:28 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே செவ்வாய்க்கிழமை பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் சென்ற கணவன், மனைவி உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே மறவமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரகாளை (46). இவரது மனைவி கவிதா(42). இருவரும் செவ்வாய்க்கிழமை கோயமுத்தூரில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் தங்களது மகளை மறவமங்கலத்திலிரு்து காரில் கூட்டிச் சென்று கல்லூரியில் விட்டுவிட்டு மறவமங்கலத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

இதையும் படிக்க | நடிகர் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

திருப்புவனத்தை அடுத்த பூவந்தி காவல் சரகம் சித்தாலங்குடி என்ற இடத்தில் வந்தபோது இந்த காரும் சிவகங்கையிலிருந்து மதுரை சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

ADVERTISEMENT

பூவந்தி அருகே விபத்தில் உயிரிழந்த வீர காளை அவரது மனைவி கவிதா

இந்த விபத்து சம்பவத்தில் வீரகாளை, கவிதா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களது உடல் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து சம்பவம் குறித்து பூவந்தி காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ADVERTISEMENT
ADVERTISEMENT