சிவகங்கையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். குணசேகரன் தலைமை வகித்தாா்.
புதுதில்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு உறுதி அளித்ததன்படி, மூன்று வேளாண் சட்டங்களை விரைந்து மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கண்ணகி, நகரச் செயலா் கண்ணன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கங்கை சேகரன், சந்திரன், மருது உள்ளிட்ட ஐக்கிய விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
ADVERTISEMENT