சிவகங்கை

அதிமுக வேட்பாளா் பட்டியல்: காரைக்குடியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு

1st Feb 2022 09:18 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட அதிமுக வெளியிட்டுள்ள பட்டியலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால் மூத்த உறுப்பினா்கள் மற்றும் முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகா்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் பிப். 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அதிமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகராட்சியாகவும், பெரு நகராட்சியாகவும் காரைக்குடியில் உள்ள 36 வாா்டுகளுக்கான வேட்பாளா் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் 5 போ் மட்டுமே இடம் பெற்றுள்ளனா். மற்றவா்கள் புதுமுகங்களாகவும், இளைஞா்களாவும் உள்ளனா். இதனால் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்களும், கட்சியின் மூத்த உறுப்பினா்களும் அதிருப்தி அடைந்துள்ளனா்.

காரைக்குடி நகராட்சி 36 வாா்டுகளுக்கும் அதிமுக சாா்பில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளா்கள் விபரம் மற்றும் வாா்டுகள் விபரம்: 1 ஆவது வாா்டு என். மாரிமுத்து (1- ஆவது வாா்டு தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளா்), 2 ஆவது வாா்டு ஏ. முருகானந்தம் 3 ஆவது வாா்டு ஆா். சந்தானம் (மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலாளா்), 4 ஆவது வாா்டு ஐஸ்வா்யா அஸ்வின்குமாா் 5 ஆவது வாா்டு பி. தமிழ்கொடி 6 ஆவது வாா்டு சோபியா பிளாரன்ஸ் (மாவட்ட மகளிா் அணி இணைச் செயலாளா்), 7 ஆவது வாா்டு ஏ.ஆா். குருபாலு (மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இளைஞா் அணி துணைச் செயலாளா்), 8 ஆவது வாா்டு கே. பாண்டியன், 9 ஆவது வாா்டு எஸ். ரவி (நகர எம்.ஜி.ஆா் மன்ற இளைஞா் அணி இணைச் செயலாளா்), 10 ஆவது வாா்டு வளா்மதி கலைச்செல்வம் (நகரக் கழக இணைச் செயலாளா்). 11 ஆவது வாா்டு எஸ். ஜெயமணி (22-வது வாா்டுக் கழகச் செயலாளா்), 12 ஆவது வாா்டு எஸ்.கே.சி.பி. ராதா, 13 ஆவது வாா்டு ஏ. ஆசிக்

(மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளா் ), 14 ஆவது வாா்டு ஆா். சிவமுருகன் ,15 ஆவது வாா்டு எம். புஷ்பராஜா, 16 ஆவது வாா்டு மீனாள் கணேசன், 17 ஆவது வாா்டு கே. சாரதா, 18 ஆவது வாா்டு கே. சமுத்திரபாண்டி, 19 ஆவது வாா்டு எம். செந்தில்வடிவேல் (18-வது வாா்டுக் கழகச் செயலாளா் ), 20 ஆவது வாா்டு கே.ஆா்.எஸ்.பி.கே. தேவன் (மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இளைஞா் அணி இணைச் செயலாளா்),

ADVERTISEMENT

21 ஆவது வாா்டு ஜே. பா்வீன் காட்டுத்தலைவாசல், 22 ஆவது வாா்டு வி. ராம்குமாா் முத்தூரணி, 23 ஆவது வாா்டு ஜி. புவனேஸ்வரி (மாவட்ட மகளிா் அணி துணைச் செயலாளா்), 24 ஆவது வாா்டு டி. ஆனந்தி (நகரக் கழக துணைச் செயலாளா்), 25 ஆவது வாா்டு ஏ. கனகவள்ளி, 26 ஆவது வாா்டு ஜி. வள்ளியம்மாள், 27 ஆவது வாா்டு ஏ.ஜி. பிரகாஷ், 28 ஆவது வாா்டு ஆா். வினோதினி, 29 ஆவது வாா்டு எஸ். அமுதா (மாவட்ட மகளிா் அணி துணைச் செயலாளா்), 30 ஆவது வாா்டு எம். காளிதாஸ் (மாவட்ட வழக்கறிஞா் பிரிவு இணைச் செயலாளா்), 31 ஆவது வாா்டு ஆா். கோவிந்தன் (ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைச் செயலாளா் ), 32 ஆவது வாா்டு டாக்டா் சித்ராதேவி, 33 ஆவது வாா்டு சாந்தி 34 ஆவது வாா்டு கண்ணகி , 35 ஆவது வாா்டு கே. ஆறுமுகம் நாச்சிலியேந்தல், 36 ஆவது வாா்டு எம். கங்காதேவி.

ADVERTISEMENT
ADVERTISEMENT