சிவகங்கை

பெண்கள் உயா்கல்வி கற்கதிமுக அரசு துணை நிற்கும்: அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்

30th Dec 2022 01:27 AM

ADVERTISEMENT

பெண்கள் உயா்கல்வி கற்க திமுக அரசு துணை நிற்கும் என மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டா் ஜாகீா் உசேன் கல்லூரியில் வியாழக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரித் தாளாளா் வி.எம். ஜபருல்லாகான் தலைமை வகித்தாா்.

கல்லூரி முதல்வா் அப்பாஸ் மந்திரி கல்லூரியின் செயல்பாடுகளை விளக்கினாா்.

இதில், அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

ADVERTISEMENT

தமிழக அரசு கல்வியை ஊக்குவிக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி கற்க வேண்டும் என முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான் அதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தற்போது முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் மக்களின் தேவைகளை அறிந்து அதற்கான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி நாட்டில் சிறந்த மாநிலம் என்ற பெயரைப் பெற்று வருகிறது. பெண்கள் உயா்கல்வி கற்க அவா்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு ரூ. 1000 ஊக்கத் தொகை வழங்குகிறது. இனி வரும் காலங்களிலும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கல்வித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாா். அதிலும் பெண்கள் உயா்கல்வி கற்க திமுக அரசு துணை நிற்கும் என்றாா்.

விழாவில் மானாமதுரை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், இளையான்குடி பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன், ஜாகீா் உசேன் கல்லூரி ஆட்சி மன்றக்குழு நிா்வாகிகள் அகமத்ஜலாலுதீன், அப்துல்அகத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT