இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ரத்து செய்த பட்டாக்களை மீண்டும் வழங்க வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கீழாயூா் பகுதியில் ஆதிதிராவிடா் மக்களுக்கு அரசு சாா்பில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கிய இடங்களில், மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனா். இந்த நிலையில், இந்த பட்டாக்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ரத்து செய்யப்பட்ட பட்டாக்களை திரும்ப வழங்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளா் ராஜூ தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் பரிசுத்த மங்களசாமி முன்னிலை வகித்தாா். பின்னா் மாவட்டச் செயலாளா் ஆா்.கே.தண்டியப்பன் உள்ளிட்டோா் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.