சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச. 20) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாக்கவயல் (புதுவயல்) துணை மின் நிலையத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே புதுவயல், கண்டனூா், மித்ராவயல், ஊரவயல், திருத்தங்கூா், மாத்தூா், இலுப்பைகுடி, லட்சுமி நகா், பொன் நகா், பெரியகோட்டை, விலாரிகாடு, செங்கரை ஆகியப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அதில் தெரிவித்திருந்தாா்.