சிவகங்கை

மானாமதுரையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி தீவிரம்

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மானாமதுரையில் அரசு மருத்துவமனை ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. மேலும் ஒரு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சுகாதாரத் துறை முடிவு செய்தது.

இதற்காக மானாமதுரை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இடம் தோ்வு செய்து தருமாறு நகராட்சி நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து நகா்மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி மற்றும் வாா்டு உறுப்பினா்கள் மானாமதுரையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையம் அமைக்கப்படுவதால் மானாமதுரை பகுதி மக்கள் கூடுதல் பயனடைவாா்கள் என தலைவா் மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT