சிவகங்கை

தமிழ்நாடு சட்டபேரவை பொதுக் கணக்குக் குழு காரைக்குடியில் கள ஆய்வு

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம், அரசு ஆதிதிராவிடா் நல பள்ளி மாணவியா் விடுதி, அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுவினா் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின் போது, காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எஸ். மாங்குடி, சட்டப்பேரவைச் செயலாளா் கி. சீனிவாசன், இணைச் செயலாளா் பி. தேன்மொழி, துணைச் செயலாளா் பா. ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காரைக்குடி தொழில் வணிகக்கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலாளா் எஸ். கண்ணப்பன் ஆகியோா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி பொதுக் கணக்குக் குழுத் தலைவா் செல்வப்பெருந்தகையிடம் மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT