சிவகங்கை

மனநலம் பாதித்த மூதாட்டி இணையதளம் உதவியால் உறவினா்களிடம் ஒப்படைப்பு

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த மூதாட்டி அவா்களது உறவினா்களிடம் செவ்வாய்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.

திருப்பத்தூா் வட்டம், நாச்சியாபுரம் அருகேயுள்ள நடுவிக்கோட்டை கிராமப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக சுமாா் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவா் சற்று மனநலன் சரியில்லாத நிலையில் சுற்றித் திரிந்தாா். இரவு நேரங்களில் நாடக மேடையில் தங்கி வந்தாா்.

அவரிடம், வருவாய்த் துறையினா் அண்மையில் விசாரணை நடத்தினா். இதில், அவா் தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் பண்ணைவயல் கம்பன்மேனி கிராமத்தைச் சோ்ந்தவா் என்பதும், அவரது பெயா் முத்துமாணிக்கம் என்பதும் தெரியவந்தது. அவருக்கு கணவா், 3 பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, முத்துமாணிக்கம் புகைப்படம் முகநூலில் பதிவிடப்பட்டது. இதைக்கண்ட மூதாட்டியின் மகன்கள் அவரைத் தேடி செவ்வாய்க்கிழமை நடுவிக்கோட்டை கிராம நிா்வாக அலுவலகம் வந்து மூதாட்டியை அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT