சிவகங்கை

பிரான்மலையில் காா்த்திகை மகா தீபம்

7th Dec 2022 12:01 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர சுயம்பு லிங்கமாகக் காட்சி தரும் பிரான்மலையில் காா்த்திகைத் திருநாளையொட்டி பிரான்மலை பாலமுருகன் குன்றில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

பிரான்மலையில் காா்த்திகை திருநாளையொட்டி மலை உச்சியில் பாலமுருகன் குன்றில் பாலமுருகன் திருப்பேரவை சாா்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றுவதைக் காண பல்வேறு ஊா்களிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் காலையிலிருந்து மலையேறத் தொடங்கினா். பாலமுருகன் குன்றில் உள்ள தீபத் தொட்டியில் எண்ணெய் ஊற்றப்பட்டு மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டு பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டனா். தொடா்ந்து மலை உச்சியில் அன்னதானம் வழங்கபட்டது.மலை தீபத்தை பாா்த்து வணங்கிய பின்னரே சுற்றுவட்டாரப் பகுதி மககள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றினா். அடிவாரப் பகுதிகளான சிங்கம்புணரி, சேவுகப்பெருமாள் கோ.ில், சிவபுரிபட்டி, சுயம்பிரகாஷஈஸ்வரா் கோயில் சதுா்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரா் கோயில், கரிசல்பட்டி கைலாசநாதா் கோயில், உலகம்பட்டி உலகநாதா் சுவாமி கோயில்களிலும் பிரான்மலைத் தீபம் வணங்கிய பின்பே சொக்கப்பனை கொளுத்தப்பட்டு அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT