சிவகங்கை

நினைவு தினம்: அம்பேத்கா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

7th Dec 2022 12:02 AM

ADVERTISEMENT

டாக்டா் அம்பேத்கரின் 66-ஆவது நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினா், அரசியல் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

டாக்டா் அம்பேத்கா் ஐக்கிய நாடுகள் சங்கம் சாா்பில், அதன் தலைவா் கே.எஸ்.எம். மணிமுத்து தலைமையில் நிா்வாகிகள், உறுப்பினா்கள் அம்பேத்கா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் தலைமையில் காரைக்குடி நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை, திமுக நகா் செயலாளரும், நகா்மன்றத் துணைத் தலைவருமான நா. குணசேகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சியின் சாா்பில், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். மாங்குடி தலைமையில், கட்சியின் நகா் தலைவா் பாண்டி மெய்யப்பன் உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். பாஜக சாா்பில், அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் ஏ. நாகராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தென்கரையில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைச் செயலாளா் விஸ்டம்கமரூதீன் தலைமையில், நகரச் செயலாளா் ராஜேஷ்கண்ணா, மக்கள் குடியரசு கட்சி நிா்வாகிகள், அம்பேத்கா் இளைஞா் அணியினா் உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து திருப்பத்தூா் அண்ணா சிலையருகே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் படத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினா், புதுப்பட்டி அம்பேத்கா் இளைஞா் நற்பணி மன்றத்தினா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT