சிவகங்கை

திருப்பத்தூா் பகுதிகளில் அம்பேத்காரின் 66 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

7th Dec 2022 12:01 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பகுதிகளில் செவ்வாய்கிழமையன்று அம்பேத்காரின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருப்பத்தூா் அருகே தென்கரையில் உள்ள அம்பேத்காரின் திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைச் செயலாளா் விஸ்டம்கமரூதீன் தலைமையில் நகரச் செயலாளா் ராஜேஷ்கண்ணா மற்றும் மக்கள் குடியரசு கட்சி நிா்வாகிகள் அம்பேத்காா் இளைஞா் அணியினா் உள்ளிட்டோா் மலா் தூவி மாலையணிவித்து மரியாதை செய்தனா். தொடா்ந்து திருப்பத்தூா் அண்ணாசிலையருகே வைக்கப்பட்டிருந்த அன்னாரின் திருவுருவ படத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சியினா் புதுப்பட்டி அம்பேத்காா் இளைஞா் நற்பணி மன்றத்தினா் வாணியன்கோயில் தெருவில் வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மலா்கள் தூவி நினைவு தினம் அனுசரித்தனா். தொடா்ந்து மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விசிக.மாநில தொண்டரணி துணைச் செயலாளா் அருள்தாஸ், மணமேல்பட்டி சந்திரன், திருப்பதி, சுண்ணாம்பிருப்பு ஊராட்சிமன்றத் தலைவா் சத்தியமூா்த்தி, ஆகியோா் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT