சிவகங்கை

குன்றக்குடியில் அண்ணாமலை தீபம் ஏற்றம்

7th Dec 2022 12:01 AM

ADVERTISEMENT

திருக்காா்த்திகை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி மலையில் அண்ணாமலை தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்துக்கு உள்பட்ட சண்முகநாதப்பெருமான் கோயிலில் திருக்காா்த்திகை விழாவையொட்டி, சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். மாலையில் திரும டத்தில் பரணி தீபம், மடத்தின் முன்பாக சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, காா்த்திகை மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சண்முகநாதப்பெருமான் எழுந்தருளினாா். அங்கு சிறப்பு தீபாரானைகள் நடைபெற்றன.

இதன் பின்னா், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் மாலை 6.10 மணிக்கு மலை மீது அண்ணாமலை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். மலை மீது அமைக்கப்பட்டிருந்த கொப்பரையில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது. இரவு சுவாமியின் வீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT