சிவகங்கை

பெண்ணிடம் ரூ. 20 ஆயிரம் நூதனத் திருட்டு

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே திங்கள்கிழமை பெண்ணிடம் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துத் தருவது போல் நடித்து ரூ. 20 ஆயிரத்தை மா்ம நபா்கள் நூதனமாகத் திருடிச் சென்றாா்.

சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலையைச் சோ்ந்த கனகரத்தினம் மனைவி ஜோதி (50). இவா் சிங்கம்புணரியில் காரைக்குடி சாலையில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றாா். அப்போது, அங்கிருந்த இரண்டு இளைஞா்கள் அப்பெண்ணுக்கு பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து அவரது ஏ.டி.எம். அட்டையைப் பெற்றனா். பின்னா், அதில் பணம் இல்லை எனக் கூறி அவரது அட்டைக்குப் பதிலாக வேறு அட்டையை கொடுத்தனுப்பினா். இதையடுத்து, வீட்டுக்கு வந்த ஜோதியின் கைப்பேசிக்கு பணம் எடுக்காமலேயே ரூ. 20 ஆயிரம் எடுத்ததாகக் குறுந்தகவல் வந்ததால், அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து ஜோதி அளித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT