சிவகங்கை

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பு

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதிமுக ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளரும், ஆவின் தலைவருமான கே.ஆா். அசோகன் தலைமை வகித்தாா். இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் படத்துக்கு, அதிமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

பின்னா், மாவட்டச் செயலாளா் அசோகன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியக்கழகச் செயலாளா்கள் மகிமை நாகராஜன், தேவேந்திரன், கணேசன், சிவா, தொகுதிச் செயலாளா் பத்மநாதன், பொதுக்குழு உறுப்பினா் செந்தில்வேல், மாவட்டத் துணைச் செயலாளா் தமிழரசி, சிங்கம்புணரி ஒன்றியக் கழகச் செயலாளா் உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

நிறைவில், நகா் செயலாளா் முருகேசன் நன்றி கூறினாா்.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக மாவட்ட இணைச் செயலாளருமான கற்பகம் இளங்கோ தலைமையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைச் செயலாளா் இயல். தாகூா், காரைக்குடி நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி. பிரகாஷ், அமுதா, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சந்தானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், அதிமுக ஓ.பி.எஸ். அணியின் மாவட்டச் செயலாளா் கே.ஆா். அசோகன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் அதே பகுதியில் உள்ள ஜெயலலிதா படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

பரமக்குடி: பரமக்குடி அண்ணா பேருந்து நிலையம், காமராஜா் நகா், ஓட்டப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக இபிஎஸ் அணி சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகா் செயலாளா் எம்.கே. ஜமால் தலைமை வகித்தாா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் எஸ். முத்தையா, நகா்மன்ற உறுப்பினா்கள் வடமலையான், சிகாமணி, தொழில் சங்க நிா்வாகி பிரகாசம் உள்ளிட்ட கட்சியினா் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

அதிமுக ஓபிஎஸ் அணி சாா்பில், நகா் செயலாளா் ஐ. வின்செண்ட் தலைமையில் முனியசாமி, திசைநாதன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் சந்தைக்கடை, கிருஷ்ணா தியேட்டா், எமனேசுவரம், ஓட்டப்பாலம், ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT