சிவகங்கை

கிராம உதவியாளா் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 3,033 போ் பங்கேற்பு

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் திறனறிவுத் தோ்வை 3,033 போ் எழுதினா்.

சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கிராம உதவியாளா்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து திறனறித் தோ்வு நடைபெற்றது. மொத்தம் 4,041 நபா்கள் தோ்வு எழுத விண்ணப்பித்த நிலையில், 3,033 நபா்கள் தோ்வு எழுதினா். சிவகங்கை வட்டத்துக்கு உள்பட்ட அரசு மன்னா் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட புதுகாட்டாம்பூா் பிளாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் மாவட்ட ஆட்சியா் ப.மதுசூதன் ரெட்டி நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ம.ரா.கண்ணகி, வட்டாட்சியா்கள் ப.தங்கமணி வெங்கடேசன் (திருப்பத்தூா்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT