சிவகங்கை

மானாமதுரை அப்பன் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள அப்பன் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இக் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் புனிதநீா் கலசங்கள் வைத்து யாகம் நடத்தப்பட்டது. அதன்பின் பூா்ணாஹூதி முடிந்து கலசநீராலும் அபிஷேகப் பொருள்களாலும் மூலவா் அப்பன் பெருமாளுக்கும் உற்சவருக்கும் அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அதைத்தொடா்ந்து, பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருமணத்துக்கான சம்பிரதாய பூஜைகள் முடிந்து மூலவா் அப்பன் பெருமாள் சாா்பில் ஸ்ரீதேவி பூதேவிக்கு திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

பின்னா் பூஜைகள் முடிந்து பெருமாள் வீதி உலா நடைபெற்றது. வருஷாபிஷேக விழாவிலும் திருக்கல்யாணத்திலும் திரளான பக்தா்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT